Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

தினமும் சூடான தண்ணில குளிச்சா மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்காம்!

A
Admin User
Journalist
March 20, 2023 1 min read 29 views
தினமும் சூடான தண்ணில குளிச்சா மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்காம்!

These bathing mistakes may increase the chances of heart attack: அன்றாடம் குளிப்பது நமக்கும், நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. இன்றைய அவசர காலக்கட்டத்தில், அனைவரும் காக்கா குளியல் தான் குளிக்கின்றனர். குளிப்பது என்பது நமது அன்றாட வழக்கத்தின் பொதுவான செயலாகும். பலர் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை குளிப்பதுண்டு. ஆனால், குளிக்கும் முறையில் செய்யும் சிறு சிறு தவறுகள் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிக்கும் முறை

ஆம், குளிக்கும் முறையில் தெரியாமல் நாம் செய்யும் தவறுகள் நம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக அனைவரும் கோடைகாலத்தில் தண்ணீரிலும், குளிர்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடும் குளிரிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது என்று எண்ணி குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் ஏராளம். சிலர் குளிர்காலத்தில் மிகவும் சூடான நீரில் குளிப்பார்கள்.

எந்த நீரில் குளிக்கலாம்?

தண்ணீர், வெந்நீர் இரண்டு வகையான நீரில் குளிப்பதுமே உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான குளிர்ச்சியின் காரணமாக நமது இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. இது நம் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மிகவும் குளிர்ந்த அல்லது மிகவும் சூடான நீரில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

ஆய்வுகளின் அடிப்படையில், சூடான மற்றும் குளிர்ந்த நீர் உங்கள் உடலுக்கு ஒருவித அதிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்று. அதுவே, வெதுவெதுப்பான நீர் உங்கள் உடலுக்கு திடீர் அதிர்ச்சியை எல்லாம் கொடுக்காது. மேலும், அது உடலின் வெப்பநிலையை சீராக பராமரித்திடும். உண்மையில், வெதுவெதுப்பான நீர் உடலின் வெப்பநிலையை சீராக்கி, இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்தால் நம் உடல் முழுவதும் நடுங்கும். அதாவது, உங்கள் உடல் அந்த குளிர்ந்த நீருக்கு எதிர்வினையாற்றத் தொடங்குகிறது என்று அர்த்தம். இத்தகைய திடீர் அதிர்ச்சி உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிகமாக சூடு மற்றும் மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தொடங்கும். இதனால், இதயம் உடலின் மற்ற உறுப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டு இரத்தத்தை வேகமாக பாய்ச்ச தொடங்குகிறது. அத்தகைய அவசரநிலையில், இதயம் தோலுக்கு அருகில் இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதன் காரணமாக தான் நம் உடல் நடுங்க தொடங்குகிறது. மேலும் நாம் நடுங்கும்போது, அது இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

யாருக்கு நல்லது

பல வகையான ஆராய்ச்சிகளின்படி, குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது வளர்சிதை மாற்றத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு, பல ஃபிட்னெஸ் பிரியர்கள் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பார்கள். ஆனால் இதுபோன்ற சோதனைகள் எந்த விதமான நோயும் இல்லாதவர்களுக்கு மட்டுடே முற்றிலும் பொருந்தக்கூடியவை என்பதை அவர்கள் மறந்து விடுடாதீர்கள். ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட ஒரு நபர் மிகவும் சூடான அல்லது குளிர்ந்த நீரில் குளித்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

நைட் சாப்பிடாமா தூங்குனா வெயிட் குறையுமா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க…

மாதவிடாய் வலியை 10 நிமிடத்தில் போக்கிடும் அற்புத கை வைத்தியம்!!!

நீங்க அடிக்கடி நகம் கடிப்பீங்களா? அப்ப உங்க பல்லுக்கு ரொம்ப ஆபத்து…

HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,556
தங்கம் (24k)
1 கிராம்
₹15,879
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க